Skip to content

முந்தைய ஆண்டு வினாக்கள்TNPSC Group 1 previous year questions

TNPSC தேர்வுகளில் உண்மையில் கேட்கப்பட்ட வினாக்கள், ஆசிரியர் சரிபார்த்த விடைகளுடன். பாடத்திட்டப்படி பிரிக்கப்பட்டுள்ளன.

83 வினாக்களில் முதல் 5 காட்டப்படுகின்றன

  1. DNA-வை இரண்டு இழைகளாக பிரிப்பதில் ஈடுபடும் நொதி யாது?

    1. Aடெலோமரேஸ்
    2. Bஹெலிகேஸ்
    3. Cபாலிமெரேஸ்
    4. Dலைகேஸ்
    விடையைக் காட்டு

    B ஹெலிகேஸ்

    திறந்த தரவுத்தொகுப்பு விடை

    ஹெலிகேஸ் நொதி, டிஎன்ஏ (DNA) இரட்டைச் சுருள் அமைப்பை இரண்டு இழைகளாகப் பிரிக்கும் பணியைச் செய்கிறது.

  2. விதை முளைத்தலின் முதல் நிலையாக நீர் உறிஞ்சப்படும் போது, இது எதை தூண்டுகிறது?

    1. Aமுளைகுருத்து தூண்டப்படுகிறது
    2. Bவிதை உறக்கம் தடைபடுகிறது
    3. Cவிதைவேர் வளர்கிறது
    4. Dசெல் இயக்கம் துவங்குகிறது
    விடையைக் காட்டு

    D செல் இயக்கம் துவங்குகிறது

    திறந்த தரவுத்தொகுப்பு விடை

    நீர் உட்கிரயமானது விதையில் உள்ள நொதிகளைச் செயல்படுத்துகிறது மற்றும் செல் வளர்சிதை மாற்றத்தை மீண்டும் தொடங்குகிறது.

  3. கீழ்க்காண்பவற்றில் எந்த ஒன்று, உலக அளவில், வெள்ளம், வறட்சி என்ற வடிவங்களில், புவித் தட்பவெப்ப முறைகளில் பாதகமான மாற்றங்களை ஏற்படுத்தி, இயற்கைப் பேரழிவுகள் நிகழக் காரணமாக இருக்கிறது?

    1. Aகரியமிலவாயு
    2. Bஎல்-நினோ
    3. Cவெப்பமண்டல சூறாவளி
    4. Dஇட்டாய்-இட்டாய்
    விடையைக் காட்டு

    B எல்-நினோ

    திறந்த தரவுத்தொகுப்பு விடை

    எல்-நினோ உலகளாவிய வானிலையை பாதித்து, வெள்ளம் மற்றும் வறட்சியை ஏற்படுத்துகிறது.

  4. காலநிலை மாற்றம் குறித்த தேசிய செயல் திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட உள்ள முதல் பணி _________ ஆகும்.

    1. Aசூரிய ஒளி நகரங்கள் திட்டம்
    2. Bதேசிய சூரிய ஒளி பணி
    3. Cசூரிய ஒளி பச்சை கட்டிடம்
    4. Dசூரிய ஒளி நகரங்களின் வளர்ச்சி
    விடையைக் காட்டு

    B தேசிய சூரிய ஒளி பணி

    திறந்த தரவுத்தொகுப்பு விடை

    காலநிலை மாற்றத்திற்கான தேசிய செயல் திட்டத்தின் (NAPCC) கீழ் தேசிய சூரிய ஒளி பணி முதலில் தொடங்கப்பட்டது.

  5. இந்தியாவில் எத்தனை ராம்சார் இடங்கள் 15 ஆகஸ்டு 2022 வரை கண்டறியப்பட்டுள்ளன?

    1. A82
    2. B78
    3. C75
    4. D70
    விடையைக் காட்டு

    C 75

    திறந்த தரவுத்தொகுப்பு விடை

    15 ஆகஸ்டு 2022 வரை இந்தியாவில் 75 ராம்சார் ஈரநில தளங்கள் இருந்தன.

மீதமுள்ள 78 வினாக்களையும் விடைகளுடன் பார்க்க உள்நுழையுங்கள்

முற்றிலும் இலவசம். கட்டணம் இல்லை, கார்டு தேவையில்லை.

Google கணக்குடன் ஒரே கிளிக். வினாக்களைச் சேமிக்கலாம், பயிற்சி செய்யலாம், உங்கள் முன்னேற்றத்தைப் பார்க்கலாம்.

இலவசமாக உள்நுழை

இந்தத் தலைப்புக்கான வழிகாட்டிகள்

தினமும் ஒரு வினாத்தாள், நேரக்கட்டுப்பாட்டுடன்

இன்றைய வினாத்தாளை எழுதி உங்கள் தரவரிசையைப் பாருங்கள்.

இன்றைய வினாத்தாள்