Skip to content

முந்தைய ஆண்டு வினாக்கள்TNPSC Group 2 2015 Indian Economy previous year questions

TNPSC தேர்வுகளில் உண்மையில் கேட்கப்பட்ட வினாக்கள், ஆசிரியர் சரிபார்த்த விடைகளுடன். பாடத்திட்டப்படி பிரிக்கப்பட்டுள்ளன.

7 வினாக்களில் முதல் 5 காட்டப்படுகின்றன

  1. எந்த மாநிலம் ஏழை எளிய மக்களுக்கு ஆஹார் என்னும் திட்டத்தை அறிமுகப்படுத்தியது?

    1. Aராஜஸ்தான்
    2. Bஒடிசா
    3. Cபீகார்
    4. Dஜார்க்கண்ட்
    விடையைக் காட்டு

    B ஒடிசா

    திறந்த தரவுத்தொகுப்பு விடை

    ஒடிசா மாநிலம் ஏழை மக்களுக்கு குறைந்த செலவில் உணவு வழங்கும் 'ஆஹார்' திட்டத்தை அறிமுகப்படுத்தியது.

  2. மதன் மோகன் மாளவியா தேசிய திட்டத்தின் நோக்கம் எதைச் சார்ந்தது?

    1. Aகாவல்துறை மற்றும் காவலர்கள்
    2. Bஆசிரியர் மற்றும் பாடம் நடத்துதல்
    3. Cமாணவர் மற்றும் பெற்றோர்
    4. Dஇராணுவம் மற்றும் தேசம்
    விடையைக் காட்டு

    B ஆசிரியர் மற்றும் பாடம் நடத்துதல்

    திறந்த தரவுத்தொகுப்பு விடை

    இந்தத் திட்டம் ஆசிரியர்களை மேம்படுத்துதல் மற்றும் கற்பித்தலை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

  3. பெண் குழந்தைக்கான புதிய சேமிப்பு திட்டத்தின் சரியான பெயரை கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றிலிருந்து தேர்வு செய்க.

    1. Aசுரக்ஷா சம்ரித்தி திட்டம்
    2. Bசுகன்யா சம்ரித்தி திட்டம்
    3. Cசுகன்யா பீமா திட்டம்
    4. Dசுரக்ஷா பீமா திட்டம்
    விடையைக் காட்டு

    B சுகன்யா சம்ரித்தி திட்டம்

    திறந்த தரவுத்தொகுப்பு விடை

    சுகன்யா சம்ரித்தி யோஜனா என்பது பெண் குழந்தைகளுக்கான சேமிப்புத் திட்டமாகும்.

  4. பின் கொடுக்கப்பட்டதில் யார் இந்தியாவில் முறையான திட்டமிடல் முயற்சியை முதலில் மேற்கொண்டவர்?

    1. Aஜவஹர்லால் நேரு
    2. Bமகாத்மா காந்திஜி
    3. CM. விசுவேஸ்வரய்யா
    4. DP.C. மகல்நோபிசு
    விடையைக் காட்டு

    C M. விசுவேஸ்வரய்யா

    திறந்த தரவுத்தொகுப்பு விடை

    எம். விசுவேஸ்வரய்யா எழுதிய 1934-ஆம் ஆண்டு 'Planned Economy for India' (இந்தியாவிற்கான திட்டமிடப்பட்ட பொருளாதாரம்) என்ற நூல், இந்தியாவில் முறையான திட்டமிடல் முன்மொழிவை முதன்முதலில் முன்வைத்ததாகும்.

  5. நோபல் பரிசு பெற்ற ஆசியாவைச் சார்ந்த முதல் பொருளாதார நிபுணரின் பெயரினை குறிப்பிடுக.

    1. Aசுப்பிரமணிய சந்திரசேகர்
    2. BProf. அமர்த்தியா சென்
    3. Cஹர்கோபிந் கொரானா
    4. Dசந்திரசேகர வெங்கட்ராமன்
    விடையைக் காட்டு

    B Prof. அமர்த்தியா சென்

    திறந்த தரவுத்தொகுப்பு விடை

    அமர்த்தியா சென் 1998-ஆம் ஆண்டு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசை பெற்றார், இதுவரை இவரைப் பெற்ற ஆசியாவிலேயே முதல் பொருளாதார நிபுணர் ஆவார். விடை (ஆ)

மீதமுள்ள 2 வினாக்களையும் விடைகளுடன் பார்க்க உள்நுழையுங்கள்

முற்றிலும் இலவசம். கட்டணம் இல்லை, கார்டு தேவையில்லை.

Google கணக்குடன் ஒரே கிளிக். வினாக்களைச் சேமிக்கலாம், பயிற்சி செய்யலாம், உங்கள் முன்னேற்றத்தைப் பார்க்கலாம்.

இலவசமாக உள்நுழை

இந்தத் தலைப்புக்கான வழிகாட்டிகள்

தினமும் ஒரு வினாத்தாள், நேரக்கட்டுப்பாட்டுடன்

இன்றைய வினாத்தாளை எழுதி உங்கள் தரவரிசையைப் பாருங்கள்.

இன்றைய வினாத்தாள்