முந்தைய ஆண்டு வினாக்கள்TNPSC Group 2 2022 Indian Polity previous year questions
TNPSC தேர்வுகளில் உண்மையில் கேட்கப்பட்ட வினாக்கள், ஆசிரியர் சரிபார்த்த விடைகளுடன். பாடத்திட்டப்படி பிரிக்கப்பட்டுள்ளன.
4 வினாக்கள்
- குரூப் 2 2022 பொது அறிவு, Q154 இந்திய ஆட்சியியல் › அடிப்படை உரிமைகள், கடமைகள், வழிகாட்டு நெறிமுறைகள்
கீழே கொடுக்கப்பட்ட அடிப்படை உரிமைகளில் எது தவறானது?
- Aசமத்துவ உரிமை
- Bஅரசியலமைப்பின் மூலம் தீர்வு காணும் உரிமை
- Cசுரண்டலுக்குண்டான உரிமை
- Dசுதந்திர உரிமை
விடையைக் காட்டு
C சுரண்டலுக்குண்டான உரிமை
திறந்த தரவுத்தொகுப்பு விடை
அடிப்படை உரிமை என்பது சுரண்டலுக்கு எதிரான உரிமை ஆகும், சுரண்டலுக்குரிய உரிமை அல்ல.
- குரூப் 2 2022 பொது அறிவு, Q171 இந்திய ஆட்சியியல் › அடிப்படை உரிமைகள், கடமைகள், வழிகாட்டு நெறிமுறைகள்
மக்கள் நலனை மேம்படுத்துவதற்காக ஒரு சமூக ஒழுங்கை அரசு பாதுகாக்க வேண்டும் என்று எந்த அரசியலமைப்பு சட்டப்பிரிவு கூறுகிறது?
- Aசட்டப்பிரிவு 38
- Bசட்டப்பிரிவு 39
- Cசட்டப்பிரிவு 37
- Dசட்டப்பிரிவு 36
விடையைக் காட்டு
A சட்டப்பிரிவு 38
திறந்த தரவுத்தொகுப்பு விடை
சட்டப்பிரிவு 38 மக்கள் நலனை மேம்படுத்துவதற்காக ஒரு சமூக ஒழுங்கை அரசு உறுதி செய்ய வேண்டும் என்று கூறுகிறது.
-
அரசியல் சாசன பகுதி V-ன் V-ம் அத்தியாயம் மக்களின் (பொது) பணத்தை கண்காணிக்க நாடாளுமன்றத்தின் ஒரு உயர் அதிகாரியை நியமனம் செய்கிறது. அவர் ________ ஆவார்.
- Aஇந்திய தலைமை தணிக்கை மற்றும் கணக்காளர்
- Bநிதி அமைச்சர்
- Cதலைமை தணிக்கையாளர்
- Dபிரதம மந்திரி
விடையைக் காட்டு
A இந்திய தலைமை தணிக்கை மற்றும் கணக்காளர்
திறந்த தரவுத்தொகுப்பு விடை
அரசியலமைப்பின் பகுதி V, அத்தியாயம் V-ல் உள்ள 148-வது உறுப்பு இந்திய தலைமை தணிக்கையாளர் மற்றும் கணக்காளரை உருவாக்குகிறது.
- குரூப் 2 2022 பொது அறிவு, Q184 இந்திய ஆட்சியியல் › அடிப்படை உரிமைகள், கடமைகள், வழிகாட்டு நெறிமுறைகள்
'14 வயதுக்குக் கீழ் உள்ள குழந்தைகள் யாரும் தொழிற்கூடம் அல்லது அபாயகரமான இடங்களில் வேலை பார்க்கக் கூடாது' - இதைக் கூறும் சட்டப்பிரிவு எது?
- Aசட்டப்பிரிவு 27
- Bசட்டப்பிரிவு 26
- Cசட்டப்பிரிவு 24
- Dசட்டப்பிரிவு 25
விடையைக் காட்டு
C சட்டப்பிரிவு 24
திறந்த தரவுத்தொகுப்பு விடை
சட்டப்பிரிவு 24, 14 வயதுக்குக் கீழ் உள்ள குழந்தைகளை தொழிற்சாலைகள் அல்லது அபாயகரமான வேலைகளில் வேலைக்கு அமர்த்துவதற்கு தடை விதிக்கிறது.
இந்தத் தலைப்புக்கான வழிகாட்டிகள்
தினமும் ஒரு வினாத்தாள், நேரக்கட்டுப்பாட்டுடன்
இன்றைய வினாத்தாளை எழுதி உங்கள் தரவரிசையைப் பாருங்கள்.
இன்றைய வினாத்தாள்