Skip to content

முந்தைய ஆண்டு வினாக்கள்TNPSC 2022 Indian Economy previous year questions

TNPSC தேர்வுகளில் உண்மையில் கேட்கப்பட்ட வினாக்கள், ஆசிரியர் சரிபார்த்த விடைகளுடன். பாடத்திட்டப்படி பிரிக்கப்பட்டுள்ளன.

8 வினாக்களில் முதல் 5 காட்டப்படுகின்றன

  1. பின்வருவனவற்றில் எந்த ஒரு குறிகாட்டி மனிதவள மேம்பாட்டுக் குறியீட்டைக் கணக்கிடப் பயன்படுத்தப்படுவதில்லை?

    1. Aவாழ்நாள் கால அளவு
    2. Bநுகர்வோர் விலை குறியீடு
    3. Cகல்விகுறியீடு
    4. Dதனிநபர் வருமானம்
    விடையைக் காட்டு

    B நுகர்வோர் விலை குறியீடு

    திறந்த தரவுத்தொகுப்பு விடை

    மனிதவள மேம்பாட்டுக் குறியீடு (HDI) என்பது வாழ்நாள் கால அளவு, கல்வி மற்றும் வருமானக் குறியீடுகளைப் பயன்படுத்தி கணக்கிடப்படுகிறது, நுகர்வோர் விலை குறியீடு அல்ல.

  2. இந்திய அரசின் பின்வரும் திட்டங்களுள் துப்புரவு தொழிலாளர்களின் பாதுகாப்பையும், மதிப்பையும் உறுதி செய்வது எது?

    1. Aஸ்மைல்
    2. Bநமஸ்தே
    3. Cஅம்பர்
    4. Dவெஸ்ட்
    விடையைக் காட்டு

    B நமஸ்தே

    திறந்த தரவுத்தொகுப்பு விடை

    நமஸ்தே (இயந்திரமயமாக்கப்பட்ட துப்புரவு சூழலுக்கான தேசிய நடவடிக்கை) துப்புரவு தொழிலாளர்களைப் பாதுகாக்கிறது.

  3. 'மண்வளத்தை மேம்படுத்துதல்' மற்றும் 'மழைநீர் சேகரிப்பைக் கட்டாயப்படுத்துதல்' - இக்கூற்றுடன் தொடர்புடையது

    1. Aபசுமைப் புரட்சி
    2. Bநீலப் புரட்சி
    3. Cபசுமையான புரட்சி
    4. Dமஞ்சள் புரட்சி
    விடையைக் காட்டு

    C பசுமையான புரட்சி

    திறந்த தரவுத்தொகுப்பு விடை

    பசுமையான புரட்சி என்பது மண் பராமரிப்பு மற்றும் நீர் சேமிப்புடன் கூடிய நிலையான விவசாயத்தை ஊக்குவிக்கிறது.

  4. பின்வருவனவற்றில் பூதலிங்கம் ஆய்வுக்குழு எதனுடன் தொடர்புடையது?

    1. Aதொழிற் சங்கங்கள்
    2. Bவேலை நிறுத்தம்
    3. Cபூட்டுதல்கள்
    4. Dஊதியங்கள்
    விடையைக் காட்டு

    D ஊதியங்கள்

    திறந்த தரவுத்தொகுப்பு விடை

    பூதலிங்கம் குழு ஊதியக் கொள்கை மற்றும் ஊதியக் கட்டமைப்பைப் பற்றி ஆய்வு செய்தது.

  5. கீழ்க்கண்ட திட்டங்களை காலமுறைப்படி வரிசைப்படுத்துக: (i) காந்தியத் திட்டம் (ii) பாம்பே திட்டம் (iii) ஜவஹர்லால் நேரு திட்டம் (iv) விஸ்வேசுவரய்யா திட்டம்

    1. A(i), (ii), (iii), (iv)
    2. B(iv), (iii), (ii), (i)
    3. C(i), (ii), (iv), (iii)
    4. D(ii), (i), (iv), (iii)
    விடையைக் காட்டு

    B (iv), (iii), (ii), (i)

    TNPSC அதிகாரப்பூர்வ விடை

    இந்திய பொருளாதாரத் திட்டங்களின் காலவரிசை.

மீதமுள்ள 3 வினாக்களையும் விடைகளுடன் பார்க்க உள்நுழையுங்கள்

முற்றிலும் இலவசம். கட்டணம் இல்லை, கார்டு தேவையில்லை.

Google கணக்குடன் ஒரே கிளிக். வினாக்களைச் சேமிக்கலாம், பயிற்சி செய்யலாம், உங்கள் முன்னேற்றத்தைப் பார்க்கலாம்.

இலவசமாக உள்நுழை

இந்தத் தலைப்புக்கான வழிகாட்டிகள்

தினமும் ஒரு வினாத்தாள், நேரக்கட்டுப்பாட்டுடன்

இன்றைய வினாத்தாளை எழுதி உங்கள் தரவரிசையைப் பாருங்கள்.

இன்றைய வினாத்தாள்