Skip to content

முந்தைய ஆண்டு வினாக்கள்TNPSC 2022 Tamil Nadu personalities previous year questions

TNPSC தேர்வுகளில் உண்மையில் கேட்கப்பட்ட வினாக்கள், ஆசிரியர் சரிபார்த்த விடைகளுடன். பாடத்திட்டப்படி பிரிக்கப்பட்டுள்ளன.

5 வினாக்கள்

  1. மதராசு மாநிலம், தமிழ்நாடு என்று பெயர் மாற்ற வேண்டி விருதுநகர் சங்கரலிங்கனார் உண்ணாவிரதமிருந்து உயிர் துறந்த ஆண்டு

    1. A1956 ஜூலை
    2. B1956 அக்டோபர்
    3. C1965 ஜூலை
    4. D1965 அக்டோபர்
    விடையைக் காட்டு

    B 1956 அக்டோபர்

    திறந்த தரவுத்தொகுப்பு விடை

    சங்கரலிங்கனார், மதராச மாநிலத்தின் பெயரை மாற்றக்கோரி 76 நாட்கள் உண்ணாவிரதமிருந்து 1956 அக்டோபர் 13 அன்று உயிர் துறந்தார்.

  2. 'ஒடுக்கப்பட்ட இந்துக்கள்' என்ற புத்தகத்தின் ஆசிரியர் யார்?

    1. AM. பழனிசாமி
    2. BR.வீரய்யன்
    3. CP.V. சுப்பிரமணியன்
    4. DM.C. ராஜா
    விடையைக் காட்டு

    D M.C. ராஜா

    திறந்த தரவுத்தொகுப்பு விடை

    எம்.சி. ராஜா 1925-இல் 'ஒடுக்கப்பட்ட இந்துக்கள்' என்ற நூலை எழுதினார்.

  3. கீழே கொடுக்கப்பட்டுள்ள இதழ்களில், எது சுப்ரமணிய பாரதியுடன் தொடர்புடையது அல்ல?

    1. Aஏ நியூ டெய்லி
    2. Bவிஜயா
    3. Cஇந்தியா
    4. Dநியூ இந்தியா
    விடையைக் காட்டு

    D நியூ இந்தியா

    திறந்த தரவுத்தொகுப்பு விடை

    நியூ இந்தியா என்பது அன்னி பெசன்ட் நடத்திய செய்தித்தாள் ஆகும், இந்தியா மற்றும் விஜயா ஆகிய இதழ்களை பாரதி ஆசிரியராக பணியாற்றி நடத்திய இதழ்கள் ஆகும்.

  4. தமிழ்நாட்டின் முதல் பெண் மருத்துவர் யார்?

    1. Aமூவலூர் ராமாமிர்தம்
    2. Bமுத்துலெட்சுமி ரெட்டி
    3. Cதர்மாம்பாள்
    4. Dபண்டிதர் ராமாபாய்
    விடையைக் காட்டு

    B முத்துலெட்சுமி ரெட்டி

    TNPSC அதிகாரப்பூர்வ விடை

    டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி தமிழ்நாட்டின் முதல் பெண் மருத்துவர் ஆவார்.

  5. சரியான கூற்றுக்களைக் கண்டறிக. 1. பாரதியின் 'இந்தியா' வார இதழ் மிதவாத தேசியவாதிகளின் குரலாகத் திகழ்ந்தது. 2. 1907-இல் சூரத் காங்கிரஸ் மாநாட்டில் பாரதி கலந்துகொண்டார். 3. சக்ரவர்த்தினி, சுதேசமித்ரன் போன்ற பத்திரிகைகளில் பாரதி பணியாற்றினார். 4. தி இந்து பத்திரிகையை வெளியிட்டவர் ஜி. சுப்பிரமணிய ஐயர்.

    1. A1 மற்றும் 2 மட்டும் சரி
    2. B1, 2 மற்றும் 3 மட்டும் சரி
    3. C2 மற்றும் 3 மட்டும் சரி
    4. D2, 3 மற்றும் 4 மட்டும் சரி
    விடையைக் காட்டு

    D 2, 3 மற்றும் 4 மட்டும் சரி

    TNPSC அதிகாரப்பூர்வ விடை

    இந்தியா' வார இதழ் தீவிரவாத தேசியவாதத்தின் குரலாக ஒலித்தது, எனவே கூற்று 1 தவறு. கூற்றுகள் 2, 3 மற்றும் 4 சரி.

இந்தத் தலைப்புக்கான வழிகாட்டிகள்

தினமும் ஒரு வினாத்தாள், நேரக்கட்டுப்பாட்டுடன்

இன்றைய வினாத்தாளை எழுதி உங்கள் தரவரிசையைப் பாருங்கள்.

இன்றைய வினாத்தாள்