Skip to content

TNPSC Group 4

29 November 2026TNPSC Group 4 daily quiz

25 questions|15 min

The first 10 questions. Answers appear tomorrow, or as soon as you take the quiz.

  1. 1தான் பாடிய பதிகத்தில் எட்டாம் பாடலில் இராவணன் சிவபக்தன் ஆனதையும், ஒன்பதாம் பாடலில் பிரமனும் திருமாலும் தேடிக் காணா இறைவன் என்பதையும், பத்தாம் பாடலில் புறச்சமயப் போலிகளைத் தாக்கியும், பதினோராம் பாடலில் தம் பெருமை கூறியும் பாடியவர் யார்?

    • Aசுந்தரர்
    • Bதிருஞானசம்பந்தர்
    • Cஅப்பர்
    • Dமாணிக்கவாசகர்
  2. 2“ஓங்கு தண்பணைசூழ் நீப வனத்தை நீத்து ஒரு போதேனும்” - இவ்வடியில் நீப வனம் என்பது ________

    • Aகடம்பவனம்
    • Bஉவவனம்
    • Cபாலைவனம்
    • Dமலர்வனம்
  3. 3பொருந்தாச் சொல்லைக் கண்டறிக: முரல், வகுலி, வாளை, வியாளம்

    • Aமுரல்
    • Bவகுலி
    • Cவாளை
    • Dவியாளம்
  4. 4தொல்காப்பியம் குறிப்பிடும் "நிறை மொழி மாந்தர்" யார்?

    • Aதேவர்கள்
    • Bஅரசர்கள்
    • Cசித்தர்கள்
    • Dபுலவர்கள்
  5. 5சிங்கங்களே! எழுந்து வாருங்கள். நீங்கள் செம்மறி ஆடுகள் என்ற மயக்கத்தை உதறித் தள்ளுங்கள்! எனக் கூறியவர்?

    • Aபாரதிதாசன்
    • Bவிவேகானந்தர்
    • Cசுபாஷ் சந்திர போஸ்
    • Dதிலகர்
  6. 6“அரசனை நம்பி புருசனை கைவிட்டது போல” -- இவ்வுவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுக்க

    • Aநகைச்சுவை
    • Bஏமாற்றம்
    • Cநம்பிக்கை
    • Dவெற்றி
  7. 7"ஓலக்கம்" என்னும் சொல்லின் வேர்ச் சொல்லைக் கண்டறிக.

    • Aஓல்
    • Bஓலம்
    • Cஓலகம்
    • Dஒட்டோலக்கம்
  8. 8“வித்தொடு சென்ற வட்டி” என்னும் நற்றிணை வரியில் குறிப்பிடப்படும் வட்டி என்பதன் பொருள் என்ன?

    • Aபனையோலைப் பெட்டி
    • Bவயல்
    • Cவட்டவடிவு
    • Dஎல்லை
  9. 9ஜெயகாந்தன் எழுதாத புதினம் எது ?

    • Aசுந்தரகாண்டம்
    • Bகங்கை எங்கே போகிறாள்
    • Cஇன்னும் ஒரு பெண்ணின் கதை
    • Dசேற்றில் மனிதர்கள்
  10. 10கல்வி இல்லாத பெண்கள் களர்நிலம் என்றவர்

    • Aநாமக்கல் கவிஞர்
    • Bசுரதா
    • Cபாரதிதாசன்
    • Dபாரதியார்