Skip to content

முந்தைய ஆண்டு வினாக்கள்TNPSC Agriculture & industry previous year questions

TNPSC தேர்வுகளில் உண்மையில் கேட்கப்பட்ட வினாக்கள், ஆசிரியர் சரிபார்த்த விடைகளுடன். பாடத்திட்டப்படி பிரிக்கப்பட்டுள்ளன.

17 வினாக்களில் முதல் 5 காட்டப்படுகின்றன

  1. கூற்று மற்றும் காரணம்

    கீழ்கண்ட வாக்கியங்களை கவனி (கூற்று மற்றும் காரணம் வகை):

    கூற்று (A)இந்தியாவில் உற்பத்தி செய்யும் திட்டம் 2014-ல் அறிமுகமானது.

    காரணம் (R)இதன் முக்கிய நோக்கம் உள்நாட்டு உற்பத்தித் துறையை ஊக்குவிப்பதும் மற்றும் நாட்டிற்கான முதலீடுகளை அதிகரிப்பதே ஆகும்.

    1. A[A] சரி, ஆனால் [R] தவறு
    2. B[A] மற்றும் [R] இரண்டும் சரி, மற்றும் [R] என்பது [A] விற்கான சரியான விளக்கம்
    3. C[A] தவறு, [R] சரி
    4. D[A] மற்றும் [R] இரண்டும் சரி, ஆனால் [R] என்பது [A] விற்கான சரியான விளக்கம் அல்ல
    விடையைக் காட்டு

    B [A] மற்றும் [R] இரண்டும் சரி, மற்றும் [R] என்பது [A] விற்கான சரியான விளக்கம்

    TNPSC அதிகாரப்பூர்வ விடை

    உற்பத்தி மற்றும் முதலீட்டை ஊக்குவிப்பதற்காக 'மேக் இன் இந்தியா' (Make in India) திட்டம் செப்டம்பர் 2014-இல் தொடங்கப்பட்டது.

  2. எந்த தொழிற்கொள்கையானது இந்தியாவில் MRTP 1969 சட்டத்தை ஒழித்தது ?

    1. A1991 ஆம் ஆண்டின் தொழிற் கொள்கை
    2. B1977 ஆம் ஆண்டின் தொழிற் கொள்கை
    3. C1980 ஆம் ஆண்டின் தொழிற் கொள்கை
    4. D1990 ஆம் ஆண்டின் தொழிற் கொள்கை
    விடையைக் காட்டு

    A 1991 ஆம் ஆண்டின் தொழிற் கொள்கை

    TNPSC அதிகாரப்பூர்வ விடை

    1991 ஆம் ஆண்டின் தொழில் கொள்கையானது MRTP சட்டத்தின் கட்டுப்பாடுகளை நீக்கியது.

  3. 'மண்வளத்தை மேம்படுத்துதல்' மற்றும் 'மழைநீர் சேகரிப்பைக் கட்டாயப்படுத்துதல்' - இக்கூற்றுடன் தொடர்புடையது

    1. Aபசுமைப் புரட்சி
    2. Bநீலப் புரட்சி
    3. Cபசுமையான புரட்சி
    4. Dமஞ்சள் புரட்சி
    விடையைக் காட்டு

    C பசுமையான புரட்சி

    திறந்த தரவுத்தொகுப்பு விடை

    பசுமையான புரட்சி என்பது மண் பராமரிப்பு மற்றும் நீர் சேமிப்புடன் கூடிய நிலையான விவசாயத்தை ஊக்குவிக்கிறது.

  4. கூற்று (A): நுண்ணீர் பாசன தொழில்நுட்பம், பாரம்பரிய நீர்பாசன முறைகளை விட பயிர்களில் அதிக மகசூல் கிடைக்க வழிவகை செய்கிறது. காரணம் (R): நுண்ணீர் பாசன திட்டத்தில் அளவான நீர் சீரான கால இடைவெளியில் பாய்ச்சப்படுகிறது. பணியாட்களின் செலவைக் குறைத்து, உரப் பயன்பாட்டுத்திறன் அதிகரிப்பதோடு விளைச்சலையும் அதிகரிக்கிறது.

    1. A(A) சரி; ஆனால் (R) தவறு
    2. B(A) தவறு; ஆனால் (R) சரி
    3. C(A) மற்றும் (R) சரி; மேலும் (R) என்பது (A)க்கு சரியான விளக்கம் ஆகும்
    4. D(A) மற்றும் (R) சரி; ஆனால் (R) என்பது (A)க்கு சரியான விளக்கம் அல்ல
    விடையைக் காட்டு

    C (A) மற்றும் (R) சரி; மேலும் (R) என்பது (A)க்கு சரியான விளக்கம் ஆகும்

    TNPSC அதிகாரப்பூர்வ விடை

    பாரம்பரிய முறைகளுடன் ஒப்பிடும்போது, நுண்ணீர்ப் பாசனமானது மகசூலை அதிகரிக்கிறது மற்றும் தொழிலாளர் செலவைக் குறைக்கிறது.

  5. மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனம் எது?

    1. Aபி.எஸ்.என்.எல் (BSNL)
    2. Bஇந்திய அஞ்சல் துறை
    3. Cஇந்திய ரயில்வே துறை
    4. Dஎண்ணெய் எரிவாயு நிறுவனம்
    விடையைக் காட்டு

    C இந்திய ரயில்வே துறை

    திறந்த தரவுத்தொகுப்பு விடை

    இந்திய ரயில்வே துறை என்பது அளவு மற்றும் வேலைவாய்ப்பின் அடிப்படையில் இந்தியாவில் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனம் ஆகும்.

மீதமுள்ள 12 வினாக்களையும் விடைகளுடன் பார்க்க உள்நுழையுங்கள்

முற்றிலும் இலவசம். கட்டணம் இல்லை, கார்டு தேவையில்லை.

Google கணக்குடன் ஒரே கிளிக். வினாக்களைச் சேமிக்கலாம், பயிற்சி செய்யலாம், உங்கள் முன்னேற்றத்தைப் பார்க்கலாம்.

இலவசமாக உள்நுழை

இந்தத் தலைப்புக்கான வழிகாட்டிகள்

தினமும் ஒரு வினாத்தாள், நேரக்கட்டுப்பாட்டுடன்

இன்றைய வினாத்தாளை எழுதி உங்கள் தரவரிசையைப் பாருங்கள்.

இன்றைய வினாத்தாள்