Skip to content

முந்தைய ஆண்டு வினாக்கள்TNPSC 2025 Aptitude & mental ability previous year questions

TNPSC தேர்வுகளில் உண்மையில் கேட்கப்பட்ட வினாக்கள், ஆசிரியர் சரிபார்த்த விடைகளுடன். பாடத்திட்டப்படி பிரிக்கப்பட்டுள்ளன.

5 வினாக்கள்

  1. சிந்து நாகரிகம் குறித்து பின்வரும் கூற்றுகளில் எவை உண்மையானவை? (i) 1920களில் மார்டிமர் வீலர் ஹரப்பா பகுதிகளில் அகழாய்வுகள் நடத்தினார். (ii) மிக நீளமானதாகக் கருதப்படும் எழுத்துத்தொடர் 26 குறியீடுகளைக் கொண்டுள்ளது. (iii) பிராகிருத கல்வெட்டுகளில் "மெலுகா" என்ற சொல் சிந்து பகுதியைக் குறிக்கிறது. (iv) ஸ்டீட்டைட் கல்லில் அமைந்த "மதகுரு அரசன்" மொகஞ்சதாரோவில் கண்டெடுக்கப்பட்டது.

    1. A(i) மற்றும் (ii) மட்டும்
    2. B(i) மற்றும் (iii) மட்டும்
    3. C(ii) மற்றும் (iii) மட்டும்
    4. D(ii) மற்றும் (iv) மட்டும்
    விடையைக் காட்டு

    D (ii) மற்றும் (iv) மட்டும்

    TNPSC அதிகாரப்பூர்வ விடை

    கொடுக்கப்பட்ட வரிசைமுறையின் அடிப்படையில், கூற்றுகள் (ii) மற்றும் (iii) சரியானவை. எனவே, விடை (ஈ) சரியானது.

  2. P மற்றும் Q ஆகியோர் ஒரு வேலையை முறையே 20 மற்றும் 40 நாட்களில் முடிப்பர். அவர்கள் இருவரும் ஒன்றாகச் சேர்ந்து வேலையைத் தொடங்கினர். சில நாட்கள் வேலை செய்த பிறகு Q சென்றுவிடுகிறார். மீதமுள்ள வேலையை P 8 நாட்களில் முடிக்கிறார் எனில், தொடங்கியதிலிருந்து எத்தனை நாட்களுக்குப் பிறகு Q வேலையை விட்டுச் சென்றார்?

    1. A9 நாட்கள்
    2. B10 நாட்கள்
    3. C8 நாட்கள்
    4. D11 நாட்கள்
    விடையைக் காட்டு

    C 8 நாட்கள்

    TNPSC அதிகாரப்பூர்வ விடை

    அவர்கள் இருவரும் சேர்ந்து ஒரு நாளில் 3/40 அளவு வேலையைச் செய்வார்கள்; P மட்டும் 8 நாட்களில் 8/20 அளவு வேலையைச் செய்கிறார், எனவே 3/5 அளவு வேலை இருவரும் சேர்ந்து செய்தார்கள், இதற்கு (3/5)/(3/40) = 8 நாட்கள் ஆகும்.

  3. ஆண்டுக்கு 4% கூட்டுவட்டியில் 6 வருடங்களில் A க்குக் கிடைக்கும் தொகையானது 8 வருடங்களில் B க்குக் கிடைக்கும் தொகைக்குச் சமமாக இருக்கும் எனில், ரூ. 2,602 ஐ A மற்றும் B க்குப் பிரித்தால் அவர்களின் பங்குகள் முறையே காண்க.

    1. Aரூ. 1,800, ரூ. 1,959
    2. Bரூ. 1,452, ரூ. 1,150
    3. Cரூ. 1,302, ரூ. 1,300
    4. Dரூ. 1,352, ரூ. 1,250
    விடையைக் காட்டு

    D ரூ. 1,352, ரூ. 1,250

    TNPSC அதிகாரப்பூர்வ விடை

    A(1.04)6 = B(1.04)8 என்பதால் A:B = 676:625 ஆகும், எனவே ரூ. 2,602-ன் பங்குகள் முறையே ரூ. 1,352 மற்றும் ரூ. 1,250 ஆகும்.

  4. a : b = 3 : 7 மற்றும் b : c = 7 : 6 எனில் c மற்றும் a இவற்றின் விகிதம் காண்க.

    1. A1 : 2
    2. B3 : 6
    3. C6 : 7
    4. D2 : 1
    விடையைக் காட்டு

    D 2 : 1

    TNPSC அதிகாரப்பூர்வ விடை

    கொடுக்கப்பட்ட விகிதங்களை இணைத்தால், a:b:c = 3:7:6 ஆகும். எனவே, c:a = 6:3 = 2:1.

  5. ஒரு வகுப்பிலுள்ள மாணவர்கள் மற்றும் மாணவிகளின் விகிதம் 5 : 3 ஆகும். ஒரு தேர்வில் 16% மாணவர்களும், 8% மாணவிகளும் தேர்ச்சி பெறவில்லை எனில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளின் சதவீதத்தைக் காண்க.

    1. A87%
    2. B13%
    3. C84%
    4. D92%
    விடையைக் காட்டு

    A 87%

    TNPSC அதிகாரப்பூர்வ விடை

    மாணவர்கள் 84% மற்றும் மாணவிகள் 92% தேர்ச்சி பெற்றனர், எனவே ஒட்டுமொத்த தேர்ச்சி பெற்ற சதவீதமானது (5x84 + 3x92)/8 = 87% ஆகும்.

இந்தத் தலைப்புக்கான வழிகாட்டிகள்

தினமும் ஒரு வினாத்தாள், நேரக்கட்டுப்பாட்டுடன்

இன்றைய வினாத்தாளை எழுதி உங்கள் தரவரிசையைப் பாருங்கள்.

இன்றைய வினாத்தாள்